பதிவு செய்த நாள்
12
பிப்
2020
11:02
மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை அருகே, கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம் சென்றனர். இளம்பிள்ளை அருகே, இடங்கணசாலை கிராமம், வளையசெட்டிப்பட்டி வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த, 29ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. நேற்று காலை, 5:00 மணிக்கு மஹா கணபதி ஹோமம் நடந்தது. 7:00 மணிக்கு கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலுக்கு சென்ற பக்தர்கள், புனித நீராடி குடங்களில் தீர்த்தங்களை நிரப்பி பின்னர் தலையில் சுமந்தபடி உடுக்கை, பம்பை முழங்க ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். இன்று காலை, 8:00 மணிக்கு பூர்ணாஹூதி, 10:30 மணிக்கு கோபுரம் கண் திறப்பு, மாலை, 5:30 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜை, நாளை காலை, 9:00 - 10:30 மணிக்குள் வரசித்தி விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.