பதிவு செய்த நாள்
12
பிப்
2020
12:02
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் வீரமாஸ்த்தி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியநாயக்கன்பாளையம், பாலமலை ரோட்டில் வீரமாஸ்த்தி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா நடந்தது. முதல் நாள் அதிகாலை மங்கல இசையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, கோபூஜை, விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், தீபாராதனை நடந்தன. தொடர்ந்து, தீர்த்த கலசம் கோவிலுக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சியும், மாலை விக்னேஸ்வர பூஜை, முதல் கால ஹோமம் ஆகியன நடந்தன. இரண்டாம் நாள் மூலமந்திர காயத்திரி ஹோமம், 108 திரவியங்களுடன் ஹோமம், இரண்டாம் கால ஹோமம், மூன்றாம் கால ஹோமம் உள்ளிட்டவை நடந்தன. மூன்றாம் நாள் அதிகாலை நான்காம் கால ஹோமம், தொடர்ந்து, மூலமந்திர ஹோமம், நாடி சந்தானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, 9.00 மணிக்கு மகா கும்பாபிஷேகம், தொடர்ந்து மகா அபிஷேகம், தச தரிசனம், மகா தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் ஆகம முறைப்படி நடந்தது. மதியம் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில், பொன்மணிவாசக அடிகளார், வராகி மணிகண்ட சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.