பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன் பாளையம் அருகே சாமிசெட்டிபாளையத்தில் தைப்பூச திருவிழா விமரிசையாக நடந்தது. தைப்பூசத்தையொட்டி காலை கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. வீதிகள் தோறும் தங்கள் வீடுகளின் முன்பு பெரிய, பெரிய தேர் கோலங்களை பெண்கள் வரைந்தனர். பின், சிறப்பு வழிபாடுகள் நடத்தி, கோலத்தை சுற்றி கும்மியடித்து, ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அடுத்த நாள் அன்னதானங்கள் நடந்தன. மாலையில் கோவிலுக்கு செல்ல மாலை அணிந்தவர்கள், மருதமலை, குருந்தமலை ஆகிய கோயில்களுக்கு புறப்பட்டு பாதயாத்திரையாக சென்றனர். நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.