பதிவு செய்த நாள்
13
பிப்
2020
11:02
பழநி, பழநி மலைக்கோயிலில் தைப்பூசம் நிறைவடைந்த பின்பும் பாதயாத்திரை பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால், மூன்று மணிநேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். பழநியில் நேற்று முன்தினம் தைப்பூச விழா முடிந்த நிலையிலும் பாதயாத்திரை பக்தர்கள், வெளி மாவட்ட, மாநில பக்தர்கள் தொடர்ந்து அதிகளவில் வருகின்றனர். அவர்கள் காவடிகள், தீர்த்த குடங்கள் எடுத்தும், சிறு தேர்களை இழுத்தும் வருகின்றனர். அடிவாரம் திருஆவினன்குடி கோயில், பெரியநாயகி அம்மன் கோயில், மலைக்கோயிலில் பக்தர்கள் மேளதாரம், தேவராட்டம், காவடி ஆட்டத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தினர். கூட்டம் அதிகரித்ததால் ரோப்கார், வின்ச் ஸ்டஷேனில் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்தினர். இந்நிலையில் காற்றின் வேகம் காரணமாக ரோப்கார் அடிக்கடி நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் படிப்பாதை மற்றும் வின்ச் வழியே சென்றனர். பொதுதரிசன பகுதியில் 3 மணிநேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.