கொழுமம் மாரியம்மன் கோவில் குப்பை அகற்றாததால் பக்தர்கள் அவதி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2012 11:05
மடத்துக்குளம்: திருவிழாவின் போது கூட கொழுமம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாக கொழுமம் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடப்பது வழக்கம் கடந்த செவ்வாய்கிழமை நோன்பு சாட்டுதலுடன் விழா துவங்கியது. இந்நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய இடங்கள், தெருக்கள், கோவில் பகுதியில் பல நாட்களாக குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளதால் துர்நாற்றம்வீசி வருகிறது. திருவிழா தொடங்கியுள்ள நிலையில் இதுபோல் ஊர்முழுவதும் தூர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். திருவிழா நாட்களிலாவது பக்தர்களின் உணர்வுகளை மதித்து குப்பைகளை அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.