திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் உழவாரப்பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2020 11:02
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் உழவாரப்பணி நடந்து வருகிறது. சென்னை டி.வி.எஸ்., நிறுவன அறக்கட்டளையின் சார்பில் ஏராளமான தன்னார்வலர்கள் பங்கேற்றனர். ஆதிஜெகநாதப் பெருமாள், பத்மாஸனித்தாயார், பட்டாபிஷேக ராமர், உள்ளிட்ட சன்னதிகள், வெளிப்பிரகாரங்களில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். கோயில் விளக்குகள், பாத்திரங்களை பாலீஸ் செய்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் ராமு, ஆகியோர் செய்திருந்தனர்.