பதிவு செய்த நாள்
19
பிப்
2020
11:02
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், துணை கோயில்களான சொக்கநாதர் கோயில், அங்காளபரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயில், பால்சுனைகண்ட சிவபெருமான் கோயில், பழனி ஆண்டவர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில்களில் உள்ள உண்டியல்கள் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன. ரூ.18 லட்சத்து 64 ஆயிரத்து 180, தங்கம் 175 கிராம், வெள்ளி ஒரு கிலோ 240 கிராம் இருந்தது. கோயில் பணியாளர்கள், வேத பாடசாலை மாணவர்கள், அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், ஐயப்ப சேவா சங்கத்தினர் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.