வேதாரண்யம்: வேதாரண்யத்தில் வேதாரணீயஸ்வரர் கோவிலிலுள்ள கால பைரவருக்கு 7ம் ஆண்டு காலாஷ்டமி, ஹோமபூஜை நடந்தது. இங்கு ஒவ்வொரு அஷ்டமி திதியிலும் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. அப்போது, சனீஸ்வர பகவானின் குருவாக கருதப்படும் காலபைரவரை நவக்கிரஹங்களினால் பாதிக்கப்படும் பக்தர்கள் வண ங்கி பரிகாரம் பெறுகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த காலபைரவருக்கு, காலாஷ்டமி தினத்தில் புனித நீர் அடங்கிய கலசங்களை வைத்து சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை ஊர்வலமாக எடுத்துச்சென்றனர். தொ டர்ந்து, காலபைரவருக்கு செவ்வரளி வடைமாலை சாத்தி, சந்தனக்காப்பு அலங்காரம் செய்வித்து தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை காலபைரவர் கைங்கர்ய சபா மற்றும் வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.