பதிவு செய்த நாள்
02
மே
2012
11:05
குற்றாலம்: குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் மே தின சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் அ.தி.மு.க., அண்ணா தொழிற்சங்கம், தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் சங்கம் சார்பில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு, குளிர் பானங்கள் வழங்கப்பட்டன. குற்றாலம் செயலாளர் வக்கீல் குமார் பாண்டியன் தலைமை வகித்தார். டவுன் பஞ்.,தலைவர் லதா, துணைத் தலைவர் கணேஷ் தாமோதரன் முன்னிலை வகித்தனர். திருக்கோயில் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் முருகேசன் வரவேற்றார். கவுன்சிலர்கள் அமுல்ராஜ், ஷீலா, ஆனந்தி, முன்னாள் கவுன்சிலர்கள் குமாரசாமி, கோட்டைசாமி, வார்டு செயலாளர் சங்கரராமன், அசோக் பாண்டியன், ஜெய்சங்கர், சாலிக்குட்டி, காந்தி, ஆரோக்கியசாமி, சுடலைமுத்து, தங்கம், ஆட்டோ சங்கத்தினர், கோயில் பணியாளர்கள் மணி பட்டர், ஆனந்த், நல்லசிவன், சுரேஷ், பால்ராஜ், கனகராஜ், கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.