பதிவு செய்த நாள்
02
மே
2012
11:05
ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி சுடலைமாடசுவாமி கோயிலில் சித்திரை கொடை விழா கால் நாட்டுதலுடன் துவங்கியது. ஆழ்வார்குறிச்சி ராமநதி ஆற்றின் கரையில் சேனையர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காக்கும் பெருமாள் சாஸ்தா மற்றும் சுடலைமாட சுவாமி கோயில் உள்ளது. இந்த ஆண்டுக்கான சித்திரை கொடை நேற்று மதியம் கொட்டகை கால்நாட்டுதலுடன் விழா துவங்கியது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் படைப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வரும் 7ம் தேதி மாலை 5.30 மணிக்கு கும்பம் ஏற்றுதலும், குடியழைப்பு வைபவமும் நடக்கிறது. கொடை விழாவான வரும் 8ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சிவனைந்தபெருமாள் பூஜையும், காலை 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் பால்குட அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு மேல் பட்டாணி பாறையில் பழம் எறிதல் வைபவமும், உச்சி கால கொடையும் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 12.30 மணியளவில் சாமக்கொடை, ஊட்டுக்களம், அர்த்தஜாம பூஜையும் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை ஆம்பூர் சங்கரசுப்பிரமணிய குருக்கள் நடத்துகிறார். 9ம் தேதி காலை 10 மணிக்கு சின்னதம்பி பூஜை நடக்கிறது. 15ம் தேதி எட்டாம் பூஜை விழா நடக்கிறது. கொடைவிழா அன்று மதியம் அம்பாசமுத்திரம் வரிதாரர்களால் சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை அறங்காவலர்கள் பண்டாரம், சுடலையாண்டி, அறங்காவலர் குழு தலைவர் பட்சிராஜன், கவுரவ தலைவர்கள் பண்டாரம், ராமசாமி, ஆலய நிர்வாகிகள் தலைவர் சுரண்டை அழகையா, செயலாளர் கீழாம்பூர் பட்சிராஜன், பொருளாளர் ஆழ்வார்குறிச்சி அருணாசலம், துணைத் தலைவர்கள், துணை செயலாளர்கள், தணிக்கையாளர்கள், ஆலோசகர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.