பதிவு செய்த நாள்
22
பிப்
2020
12:02
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில், மனோன்மணி உடனமர் வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. இக்கோவிலில் பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி விழா விமரிசையாக நடந்தது.
பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் நடந்தன. மேலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு, 7 மணிக்கு முதல்கால பூஜையும், 10 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 12.30 க்கு மூன்றாம் கால பூஜை, அதிகாலை,4.30 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடந்தன. பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், மகாசிவராத்திரி விழா நடந்தது. நேற்று மாலை 4 லிருந்து 6 மணி வரை, பிரதோஷ பூஜை நடந்தது. அதை தொடர்ந்து, 6.30 மணிக்கு முதல்கால பூஜையும், இரவு,11.30 க்கு இரண்டாம் கால பூஜை, அதிகாலை,2.30 மணிக்கு மூன்றாம் கால பூஜை, விடியற்காலை,5.30 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் பெரியமருது பாண்டியன் மற்றும் கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.