பதிவு செய்த நாள்
02
மே
2012
11:05
ஈரோடு: ஈரோடு, ரங்கம்பாளையம், காந்திஜி நகர் சமயபுரத்து மாரியம்மன் கோவிலில், புதிதாக கட்டப்பட்ட வலம்புரி விநாயகர் மற்றும் பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா மே 12ல் நடக்கிறது. மே, 11ம் தேதி காலை 5 முதல் 6 மணி வரை கணபதி ஹோமம், 9 முதல் 10 மணி வரை காவிரியாற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருதல், மாலை 6 மணிக்கு விநாயகர் பூஜை, புண்யாஹம் வாஸ்து பூஜை, தீபாராதனை நடக்கிறது. இரவு ஸ்வாமி பிரதிஷ்டை, கலசம் யாகசாலை பூஜை நடக்கிறது. மே, 12ம் தேதி அதிகாலை 4 மணிக்கு யாகசாலை பூஜை, கும்பம் பூஜை, பூர்ணாஹூதி, தச தரிசனம் பூஜை மற்றும் தீபாராதனை நடக்கிறது. இக்கோவில் முதலாமாண்டு குண்டம் திருவிழா சென்ற 24ம் தேதி பூச்சாட்டு மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 5 மணிக்கு பூச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல் நடந்தது. இன்று மாலை 6 மணிக்கு குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சியும், நாளை அதிகாலை 3 மணியில் இருந்து குண்டம் இறங்குதல், 6 மணிக்கு பொங்கல் வைத்தல், 7 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. 3ம் தேதி கொடி இறக்கு, மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. மாலை 7.30க்கு மறு பூஜை நடக்கிறது.