லட்சுமி வாசம் செய்யும் இடம் வில்வமரம். இதன் இலையால் சிவனை பூஜிக்க மோட்சம் கிடைக்கும். இதற்கு ‘நிர்மால்ய தோஷம்’ கிடையாது. அதாவது, ஒருமுறை பயன்படுத்திய வில்வத்தை தண்ணீரில் கழுவி மீண்டும் பயன்படுத்தலாம். மூன்று வில்வ இலைகள் சேர்ந்திருப்பதை ‘வில்வ தளம்’ என்பர். இதனால் பூஜிப்பது சிறப்பு. அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வில்வம் பறிப்பது கூடாது.