ஜீவானந்தபுரம் கோவிலில் சித்திரை திருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2012 11:05
புதுச்சேரி: புதுச்சேரி ஜீவானந்தபுரம் ஜலமுத்துமாரியம்மன் கோவிலின் 39ம் ஆண்டு சித்திரை திருவிழா நாளை (4ம்தேதி) துவங்குகிறது. விழாவையொட்டி நாளை காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து பந்தக்கால் முகூர்த்தம், காப்புக் கட்டுதல் மற்றும் அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. 5ம் தேதி காலை அபிஷேக ஆராதனை, கரகம் ஜோடித்து வருதல், பகல் 1 மணிக்கு பால்சாலை வார்த்தல். மாலை 6 மணிக்கு பம்பை உடுக்கையுடன் அம்மன் கதை வர்ணிப்பு, இரவு 7.30 மணிக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. 6ம் தேதி காலை 6 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, பிற்பகல் 2.30 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் அம்மன் வீதிலா, மாலை 6.30 மணிக்கு காப்புக் களையும் நிகழ்ச்சி நடக்கிறது.