காரைக்கால்: காரைக்கால் தலத்தெரு தங்க மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. காரைக்கால் தலத்தெரு சிவலோகநாதர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்க மாரியம்மன் கோவில் தீமிதி விழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் இரவு அம்மன் வீதியுலா நடந்தது. 2 நாட்களுக்கு முன் தீ மிதி திருவிழா நடந்தது. பகல் 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு கோவிலுக்கு எதிரே அமைத்திருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். இரவு அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நேற்றுமுன்தினம் விடையாற்றி உற்சவத்தையொட்டி அம்மன் பொன்னூஞ்சல் நிகழ்ச்சி நடந்தது. தெற்கு தொகுதி நாஜிம் எம்.எல்.ஏ., உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.