பதிவு செய்த நாள்
03
மார்
2020
10:03
பந்தலுார்:பந்தலுார் அருகே, அத்திக்குன்னா மகாசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 24ம் தேதி காலை கொடிமர வேல்வி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 29ம் தேதி வரை, தொடர் பூஜைகள் நடந்தது. 1ம் தேதி அபிஷேக, ஆராதனை, தொடர்ந்து அலகு குத்துதல், பால் குடம், காவடி ஆட்டம், பறவை காவடி ஊர்வலம் நடந்தது.அதில், பக்தர்கள், 7 முதல் 9 அடி நீளமுள்ள வேல் குத்தியும், பறவை காவடி எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தினர். தொடர்ந்து, அன்னதானம், மாவிளக்கு பூஜை, தேர் ஊர்வலம் நடந்தது. தேர் ஊர்வலத்தை தர்மகர்த்தா கருப்பையா, தலைவர் குமார் மற்றும் கமிட்டி நிர்வாகிகள் தலைமையில் எம்.எல்.ஏ., திராவிடமணி உட்பட மக்கள் பிரதிநிதிகள் பலர் துவக்கி வைத்தனர். பூஜைகளை அர்ச்சகர் கனநாதன் குருக்கள் தலைமையில் பல அர்ச்சகர்கள் செய்தனர்.