ஒரு மனிதர் நபிகளாரை சந்திக்க காத்திருந்தார். ‘‘வந்திருப்பவர் நல்ல மனிதர் இல்லை. யாருக்கும் உதவி செய்ய விரும்பாதவர். இருந்தாலும் வரச் சொல்லுங்கள்,” என்றார். அவரிடம் பரிவுடன் பேசி அனுப்பினார். அவர் சென்ற பின்னர் நாயகத்தின் மனைவி ஆயிஷா, “அந்த மனிதரின் குணம் தெரிந்தும் எப்படி உங்களால் மகிழ்ச்சியுடன் உரையாட முடிகிறது?” என்றார். “இறைவனின் பார்வையில் கெட்ட மனிதர் யார் தெரியுமா? தன்னோடு மற்றவர் உறவாட இடம் தராதபடி தீயமொழிகளைப் பேசுபவன் தான்’’என்றார். அதனால் அனைவரிடமும் பாரபட்சம் இல்லாமல் பேசிப் பழகுங்கள்.