ஒரு சமயம் நாயகம் தோழர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரது செவிலித்தாய் ஹலீமாவின் கணவர் வந்தார். உடனே தான் அமர்ந்திருந்த விரிப்பின் ஒரு முனையை விரித்து அமரச் செய்தார். பின் ஹலீமாவின் தாயார் வந்தார். அவருக்கு மற்றொரு முனையை விரித்துக் கொடுத்தார். இதையடுத்து ஹலீமாவின் சகோதரரும் அங்கு வரவே, எழுந்து நின்று தன் இடத்தை விட்டுக் கொடுத்தார். மற்றவருக்கு விட்டுக் கொடுப்பதே மேலான இன்பம்.