சொற்ப வருமானத்தில் திருப்தியாக வாழுகின்ற மனிதனை வாழ்த்துகிறேன். அப்படிப்பட்ட நல்லவனை, இறைவன் திருப்தியோடு ஏற்கிறான். ஒரு மனிதன் மீது விருப்பம் கொண்டால் மட்டுமே, இறைவன் பலவகையிலும் அவனை சோதிப்பான். சோதனையைப் பொறுத்துக் கொண்டு திருப்தியுடன் வாழ்பவனே சிறந்த மனிதன்’’ என்கிறார் நாயகம். இறைவனால் நமக்கு என்ன தரப்பட்டிருக்கிறதோ, அதை முழுமனதுடன் ஏற்கப் பழக வேண்டும். அவரவர் வருமானம், தகுதிக்கு ஏற்ப செலவு செய்து வாழ்க்கைத் திட்டத்தை அமைக்க வேண்டும்.