ஒருமுறை நபிகள் நாயகம், மதீனாவுக்கு வெளியே கூடாரமிட்டு தங்கியிருந்த ஒட்டக வியாபாரிகளைச் சந்தித்தார். அவர்களிடம் இருந்த சிவப்பு நிற ஒட்டகம் பிடித்துப் போனதால் அதன் விலையைக் கேட்டார். அவர்கள் சொன்னதுமே, அதன் மூக்கணாங்கயிற்றைப் பிடித்தபடி வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தார். “பணம் தராமல் செல்கிறாரே! இவர் யார்?” என படபடப்புடன் கேட்டாள் அங்கிருந்த ஒரு பெண். “அவரது முகம் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது? இது தானே நல்லவரின் அடையாளம்! இப்படிப்பட்டவர் நம்மை ஏமாற்ற மாட்டார். பணமோ அல்லது ஒட்டகத்தின் விலைக்கு ஈடான பொருட்களோ கொண்டு வருவார்” என பதிலளித்தார் வியாபாரிகளில் ஒருவர். அன்று மாலையே ஒட்டகத்தின் விலைக்கு ஈடான பேரீச்சம் பழங்களை அவர்களுக்கு வந்து சேர்ந்தன.