திசையன்விளை : உவரி கோயிலில் வரும் 5ம் தேதி பிரதோஷ சித்திரை பெருவிழா நடக்கிறது. உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் 337வது பிரதோஷ சித்திரை பெருவிழா வரும் 5ம் தேதி நடக்கிறது. அன்று காலையில் திருவாசகம் முற்றோதுதல், சுயம்புலிங்க சுவாமி மஹா அபிஷேகம், நந்தீஸ்வரர் சுவாமி அபிஷேகம், மஹா தீபாராதனையும், மதியம் அன்னதானமும், மாலையில் 1008 தீபஜோதி ஏற்றுதல், திருச்செந்தூர் பாரத திருமுருகன் திருச்சபை டாக்டர் மோகனசுந்தரம், வாசுகி மனோகரன் ஆகியோர் பக்தி சொற்பொழிவும், இரவில் புஷ்பாஞ்சலி, மஹா தீபாராதனை, சேரன்மகாதேவி செல்லப்பா குழுவினரின் பக்தி இன்னிசை மற்றும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், பிரதோஷ விழா அமைப்பாளர் ராஜா செய்து வருகின்றனர்.