சிற்றாற்று வீரியம்மன் கோயிலில் 21ம் தேதி கொடை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2012 11:05
தென்காசி : தென்காசி சிற்றாற்று வீரியம்மன் கோயிலில் வரும் 21ம் தேதி கொடை விழா துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது. தென்காசி முடுக்கு விநாயகர் கோவில் தெரு சிற்றாற்று வீரியம்மன் கோயிலில் வரும் 21ம் தேதி கொடை விழா துவங்குகிறது. அன்று அதிகாலையில் கணபதி ஹோமம், அபிஷேகத்துடன் நிகழ்ச்சிகள் துவங்குகிறது. காலை 6 மணிக்கு கொலுமேள நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சிற்றாறு நதிநீர் கொண்டு வரப்படுகிறது. நையாண்டி மேள கச்சேரி, ஆசார கும்பம், தீபாராதனை, வில்லிசை நிகழ்ச்சி நடக்கிறது. இரண்டாம் நாளான 22ம் தேதி காலையில் பால்குடம், வில்லிசை கச்சேரி, மதியம் உச்சிக்கால பூஜை நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் பொங்கலிடும் வைபவம், இரவு ராஜமேளம், நள்ளிரவு கொடை விழா பூஜை, வில்லிசை கச்சேரி நடக்கிறது.