பதிவு செய்த நாள்
04
மார்
2020
01:03
கோவை:கோவையின் காவல் தெய்வமாக, டவுன்ஹால், மணிக்கூண்டு அருகில் வீற்றிருக்கும் கோனியம்மனுக்கு, ஆண்டுதோறும் மாசி மகத்தேர்த்திருவிழா நடக்கிறது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான, தேரோட்டம், இன்று மதியம் நடக்கிறது.தேர்த்திருவிழா, கடந்த, ஜன., 27ல் தேர் முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. தினமும் அம்மன் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்தார். நேற்றிரவு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று அதிகாலை, 4:00 மணி முதல் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜையை தொடர்ந்து, காலை, 5:00 மணிக்குள், திருத்தேருக்கு எழுந்தருள்கிறார். மதியம், 2:05 மணிக்கு, ராஜவீதியில் உள்ள தேர்நிலைத்திடலில் இருந்து, திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ராஜவீதியில் புறப்பட்டு, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்ப கவுண்டர் வீதி வழியாக வலம் வநத்து, மாலை, மீண்டும் ராஜவீதியில் நிலையை அடைகிறது.