பதிவு செய்த நாள்
06
மார்
2020
10:03
ராசிபுரம்: ஒடுவன்குறிச்சி சிவன் கோவிலில், வரும், 9ல் கும்பாபிஷேகம் நடக்கிறது.
நாமகிரிப்பேட்டை அடுத்த, ஒடுவன்குறிச்சியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவன் கோவில் உள்ளது. மனோன்மணி தாயார் சமேத வெள்ளியங்கிரி ஈஸ்வரர் என்றழைக்கப்படும் இக்கோவில் வளாகத்தில் பெருமாள், பாலமுருகன் ஆகியோருக்கும் கோவில் உள்ளது. கும்பாபிஷேக விழா, வரும், 9ல் நடக்கிறது. முன்னதாக, 8ம் தேதி காலை, 7:30க்கு கணபதி ஹோமம், லஷ்மி, குபேர ஹோமத்துடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து, கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு ஒடுவன்குறிச்சி காவிரி அம்மன் கோவிலில் இருந்தும், பெருமாள் கோவிலில் இருந்தும் புனித நீர் எடுத்து வரப்படும். மாலை, 5:00 மணிக்கு விநாயகர் வழிபாடு ருத்ர ஹோமம் துவங்குகிறது. இரவு, 10:00 மணிக்கு மேல் சுவாமிக்கு தனவாசம், தனியவாசம் செய்யப்படும். 9ம் தேதி காலை, யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு நடக்கிறது. 7:30 மணிக்கு மேல் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. தொடர்ந்து, சிறப்பு பூஜை, திருக்கல்யாணம், தீபாராதனை நடக்கவுள்ளது.