வேலம்பாளையம் அம்மன் கோவிலில் அம்மன் சிலை மீது ஊர்ந்து சென்ற பாம்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2020 10:03
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, அம்மன் கோவில் கருவறைக்கு சென்ற பாம்பு பின்னர் சிலை மீது ஊர்ந்து சென்றது. ராசிபுரம் அடுத்த, வேலம்பாளையம் அம்மன் கோவிலில், வெள்ளி, அமாவாசை போன்ற நாட்களில் அபிஷேகம் செய்து அம்மனை வழிபடுவர். நேற்று முன்தினம் மாலை, பூசாரி உள்ளே நுழைந்தபோது திடீரென கருநாகப் பாம்பு ஒன்று அம்மனின் தலையில் சுற்றியிருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தார். பொதுமக்களும் பயபக்தியுடன் வழிபட்டனர். அங்கிருந்த சமூக ஆர்வலர்கள், உடனடியாக ராசிபுரம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் அம்மன் கழுத்தில் சுருண்டிருந்த பாம்பை மீட்டு காட்டுப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.