Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருமாத்தூர் கோவில்களில் உண்டியல் ... திருக்கோஷ்டியூர் மாசித் தெப்ப உத்ஸவம்: சுவாமி உலா திருக்கோஷ்டியூர் மாசித் தெப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூர் தியாகராஜர் தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவொற்றியூர் தியாகராஜர் தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

06 மார்
2020
01:03

திருவொற்றியூர் : திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலில், மாசி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு, திருத்தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலில், மாசி பிரம்மோற்சவ திருவிழா, பிப்.,29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டு பழமை வாய்ந்தது. இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவ திருவிழா, வெகு விமரிசையாக நடக்கும். இந்தாண்டு, மாசி பிரம்மோற்சவம், பிப்.,29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மாசி பிரம்மோற்சவ நாட்களில், உற்சவர் சந்திரசேகரர், சூரிய பிரபை, சந்திர பிரபை, பூதம், சிம்மம், நாகம், ரிஷபம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி, யானை, புஷ்ப பல்லாக்கு, குதிரை, இந்திர விமானம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாடவீதி உலா வந்து அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளான, சந்திர சேகரர் திருத்தேர் உற்சவம் இன்று( மார்., 6) கைலாய வாத்தியங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். வரும் 8ம் தேதி காலை, திருக்கல்யாணம், மதியம், 63 நாயன்மார்கள் உற்சவம், இரவு, மகிழடி சேவை போன்றவை நடைபெறும். வரும், 10ம் தேதி இரவு, தியாகராஜ சுவாமி பந்தம்பறி உற்சவம், 18 திருநடனத்துடன் விழா நிறைவுறும்.பிரசித்தி பெற்ற, தியாகராஜர் கோவில் மாசி பிரம்மோற்சவ திருவிழாவில் சென்னை மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தில் இருந்து, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன், பெருமாள் கோவிலில், துர்காஷ்டமி நவராத்திரி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு இந்தியன் வங்கி திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு கிளை சார்பில், ... மேலும்
 
temple news
சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆகம விதிகளுக்கு முரணாக அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar