உசிலம்பட்டி: கருமாத்தூர் கோவில்களில் மகா சிவராத்திரி விழாவில் வசூலான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
கருமாத்தூரில் உள்ள கோயில்களான பொன்னாங்கன், விருமப்பசாமி, கலியுக சிதம்பர ஈஸ்வரர், ஆரிய பட்டி கல்யாண கருப்பசாமி கோயில்களில் மகா சிவராத்திரி திருவிழா வருவாய்த் துறையினரின் மேற்பார்வையில் நடந்தது. திருவிழா நிறைவு பெற்ற பின்னர் உண்டியல்களை தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். நேற்று காலை முதல் தாசில்தார் செந்தாமரை, சமூக பாதுகாப்பு தாசில்தார் தமிழ்செல்வி,துணை தாசில்தார் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கோவில் நிர்வாகிகள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எண்ணும் பணி நிறைவு பெற்றதும் திருவிழா செலவுகள் போக பாக்கி தொகை அந்தந்த கோவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.