சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை 5:00 மணிக்கு பூர்ண புஷ்கலை உடனாகிய அய்யனாரப்பன், கிராம தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சக்தி அழைத்தல், அனுக்ஞை, யாக சாலை, யாக வேள்வி பூஜைகள் நடந்தது. 7:00 மணிக்கு கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை நடந்தது.தொடர்ந்து, 8:00 மணிக்கு கடம் புறப்பாடு கோபுர விமானம் மற்றும் மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.தேவபாண்டலம் ரவி குருக்கள், மஞ்சபுத்துார் கணேசன் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.