பதிவு செய்த நாள்
07
மார்
2020
02:03
பொன்னேரி: வரசித்தி விநாயகர் கோவிலில், புதிதாக நிறுவப்பட்ட நவக்கிரக சன்னிதி கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. பொன்னேரி அடுத்த வேண்பாக்கத்தில், வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இதன் வளாகத்தில், நவக்கிரக சன்னிதி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபிஷேகம் நடந்தது.காலை, 8:30 மணிக்கு, நவக்கிரக சன்னிதி கோபுர கலத்திற்கும், நவக்கிரகங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பக்தர்கள் மீது, புனித நீர் தெளிக்கப் பட்டது.இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, விநாயகரையும், நவக்கிரகங்களையும் வழிபட்டு சென்றனர்.மாலை, வரசித்தி விநாயகருக்கும், நவக்கிரகங்களுக்கும் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.