பதிவு செய்த நாள்
09
மார்
2020
11:03
மேச்சேரி: மேச்சேரி, பத்ரகாளியம்மன் கோவிலில், மாசி திருவிழாவையொட்டி, நேற்று மாலை, 4:30 மணிக்கு விநாயகர் தேர், பத்ரகாளியம்மன் சின்னதேர் வீதி உலா நடந்தது. ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன், மேட்டூர் எம்.எல்.ஏ., செம்மலை ஆகியோர், வடம்பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனர். பின், திரளான பக்தர்கள், சந்தைப்பேட்டை, பஸ் ஸ்டாண்ட் வழியாக இழுத்து வந்து, மாலை, 6:00 மணிக்கு நிலையை அடைந்தனர்.
மழை பொழிய, உலக நன்மை வேண்டி, அரியானூர், மகா சக்தி மாரியம்மன் கோவிலில், நேற்று, மாசி மகம் திருவிழாவில், சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து நடந்த பூஜையில் வைக்கப்பட்டிருந்த புனிதநீரால், மூலவர் மகாசக்தி மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து, சர்வ அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். அதேபோல், வீரபாண்டி அங்காளம்மன், உத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவில்களில், சிறப்பு அபிஷேகம் நடந்தது.