திருப்பரங்குன்றம் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2025 10:12
திருப்பரங்குன்றம்; வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளியுள்ளதால் நேற்று மாலை கம்பத்தடி மண்டபத்திலிருந்து மடப்பள்ளி மண்டபம் செல்லும் வழியிலுள்ள பெரிய கதவு திறக்கப்பட்டு பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளினார்.
* திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள மூலவர்கள் ஸ்ரீதேவி, பூமாதேவி, ஸ்ரீநிவாச பெருமாளுக்கு அதிகாலை சிறப்பு முத்தங்கி அலங்காரமாகி விஸ்வரூப தரிசனம் முடிந்து காலை 5:30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. சயனகோலத்தில் உற்சவர்கள் அருள்பாலித்தனர். இரவு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.