தேவகோட்டை: மாசிமகத்தை முன்னிட்டு குன்றக்குடியில் இருந்து நேற்று காலை ரத்தினவேல் தேவகோட்டை நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு வெளியே எடுக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஊர்வலமாக நகர பள்ளிக்கூடம் எனும் கோயிலுக்கு கொண்டு வந்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் பன்னீரால் பூஜை செய்தனர். தொடர்ந்து வைரக்கற்களுடன் கூடிய ரத்தினவேல் அங்கிருந்த மயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் இருந்த சுவாமி முருகனின் கைகளில் அணிவிக்கப்பட்டது.ரத்தினவேலை வெளியே எடுத்தால் 16 மூடை அரிசியில் சாதம் செய்து மற்றும் காய்கறிகளுடன் பக்தர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்ற ஐ தீகப் படி உணவு தயார் செய்து ரத்தினவேல் அணிந்த முருகனுக்கு படையல் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு உணவு பரிமாறப்பட்டன. மீண்டும் அந்த வேல் குன்றக்குடி கொண்டு செல்லப்பட்டது. இந்த ரத்தினவேல் தைப்பூச விழாவின் போது பழநி அன்னதான மடத்தில் வெளியே எடுக்கப்படும். அடுத்தது தேவகோட்டையில் தான் வெளியே எடுக்கப்படும் என்பது மரபு.