திருநெல்வேலி, மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பா் காந்திமதியம் மன் கோயிலில் அப்பா் தெப்ப திருவிழா நேற்று வெகுவிமாிசையாக நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். சைவசமயக் குரவா்களில் ஒருவரான அப்பா் பெருமானின் பக்தியை சோதிக்கும் வகையில் அவரை கல்லுடன் சோ்த்து கட்டி கடலில் போட்டனா். அப்பா் பெருமான், சிவபெருமானை நினைத்து பாடினாா். அப்போது கல்லானது (உரல்) தெப்பமாக மாறி கடலில் மிதந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இதை நினைவு கூறும் வகையில் நெல்லையப்பா் காந்திமதியம்மன் திருக்கோயிலில் அப்பா் தெப்பத்திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான அப்பா் தெப்ப திருவிழா நேற்று வெகு விமாிசையாக நடந்தது. அம்மன் சன்னிதி அருகேயுள்ள பொற்றாமரை குளத்தில் தெப்பத்தில் அப்பா் பெருமாள் பவனி வந்தாா். பின்னா் தெப்பத்திருவிழா மண்டபத்தில் சுவாமி கைலாசபா்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக் கிளி வாகனத்திலும் எழுந்தருவி அப்பா் பெருமானுக்கு திருக்காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ராமராஜ் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.