மதுரை சித்திரைத் திருவிழாவிற்கு வைகை அணையில் தண்ணீர் திறப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2012 11:05
ஆண்டிபட்டி:மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து நேற்று மாலை 6 மணிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. மதுரை சித்திரை திருவிழாவில் மே 6ல், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்காக வைகை அணையில் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று மாலை அணை நீர் மட்டம் 49.08 அடியாக இருந்தது (மொத்த உயரம் 71 அடி). நீர் வரத்து இல்லை. அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் இன்று காலை 6 மணிக்கு ஆயிரம் கன அடியாகவும், மாலை 6 மணிக்கு 500 கன அடியாகவும் குறைக்கப்படும். மே 5ல் காலை 250 கன அடியாக குறைக்கப்பட்டு அன்று மாலை 6 மணிக்கு நிறுத்தப்படும். மதுரை, சேடபட்டி- ஆண்டிபட்டி கூட்டு குடிநீருக்காக ஏற்கனவே திறக்கப்பட்ட 60 கன அடிநீர் தொடர்ந்து வெளியேற்றப்படும். அணையில் திறக்கப்பட்டுள்ள நீர் சனிக்கிழமை மதுரை சென்றடையும் ,என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.