திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் நாளை சித்திரை பிரமோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 26 கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் துவங்கியது. நாளை பெருமாள் பூமிக்கு அவதரித்ததை முன்னிட்டு திரு நட்சத்திரமான சித்திரை சித்திரை நட்சத்திரத்தில் தேரோட்டம் நடைபெறும். காலை 9 மணிக்கு தேரில் பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் எழுந்தருளுகிறார்.தொடர்ந்து மக்கள் வழிப்பாட்டிற்கு பின்னர் மாலை 4.20 மணி அளவில் தேர் வடம் பிடிக்கப்படும். மே.7ம் தேதியன்று பூப்பல்லக்கில் பெருமாள் புறப்பாடு நடைபெறும்.