நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு அன்று மாலை 4:00 மணிக்கு விநாயகர், ராஜராஜேஸ்வரி, ராஜராஜேஸ்வரர், பாலதண்டாயுதபாணி, நால்வர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது.மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் கோவில் அடிவாரத்தை 16 முறை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். இரவு 8:00 மணிக்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.அதனை தொடர்ந்து ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய உலாவாக வந்து ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு அம்மனுக்கு 9:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் ,மகா தீபாராதனை நடந்தது.பூஜையில் பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் விழாக் குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.