வடமதுரை :தென்னம்பட்டி, பிலாத்து ஊராட்சிகளை சேர்ந்த ஆண்டிப்பட்டியில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந் தது.மூன்று நாட்களாக நடந்த 5 கால பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடாகி விமான கலசங்களுக்கு புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடந் தது. சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர். ஏற்பாடுகளை வீரசைவ சமூகத்தின் கொண்டகிரி குல நிர்வாகிகள் செய்திருந்தனர்.