நத்தம் :நத்தத்தில் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா பூப்பல்லக்குடன் நிறைவடைந்தது.கடந்த பிப்.14 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மறுநாள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்து பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் துவங்கினர். முக்கிய நாட்களில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அம்மன் நகர்வலம் சென்றார்.மார்ச் 6 அன்று பூக்குழி கண்திறப்பு, மார்ச் 8ல் பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். மறுநாள் அம்மனுக்கு மஞ்சள் பாவாடை கொண்டு வரப்பட்டது. மார்ச் 10 அன்று அக்னிச்சட்டி எடுத்தல் மற்றும் கழுமரம் ஏற்றம் நடந்தது. மாலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக காப்புக்கட்டிய 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.நேற்று முன்தினம் பகலில் மஞ்சள் நீராட்டும், இரவு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் பூப்பல்லக்கில் நகர்வலமும் சென்றார். வழியெங்கும் பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர். நேற்று காலை அம்மன் கோயிலை அடைந்ததுடன் விழா நிறைவடைந்தது.