நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் கிருமி நாசினி தெளிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2020 12:03
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை பீதிக்குள்ளாகி வருகிறது. இந்தியாவிலும் அதன் பாதிப்பு துவங்கியுள்ளது.
முன்னெச்சரிக்கையாக, கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் உள்ளாட்சித் துறை மூலம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல், வளாகம், கைப்பிடி குழாய்கள், கதவு கைப்பிடிகள் உள்ளிட்ட பகுதிகளில், நகராட்சி சுகாதார அலுவலர் சுகவனம் தலைமையில், சுகாதாரப் பணியாளர்கள் கிருமி நாசினி கரைசல் திரவத்தை கைத்தெளிப்பான்கள் மூலம் தெளிக்கும் பணியை நேற்று மேற்கொண்டனர். கோரோனா பாதிப்பு, தடுப்பு குறித்து பக்தர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.