இந்தூர்: சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது, சூரிய கிரகணம் நிகழும். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் 21ம் தேதி நிகழவுள்ளது. இது முழு சூரிய கிரகணம் அல்ல. பகுதி கிரகணமாகும். சூரியனின் ஒரு பகுதி மட்டுமே, சந்திரனின் பின்னால் மறைந்திருக்கும். நாட்டின் கிழக்குப் பகுதிகளில் இந்த சூரிய கிரகணத்தை காணமுடியும்.இதுகுறித்து மத்திய பிரதேசம் உஜ்ஜைனியில் உள்ள ஜிவாஜி ஆய்வக இயக்குனர் ராஜேந்திர பிரகாஷ் குப்தா கூறுகையில், ""பகுதி சூரிய கிரகணம் வரும் 21ம் தேதி பிற்பகல் 3.39 மணிக்கு துவங்கி, இரவு 7.06 மணிக்கு முடிவடையும். அதேநேரத்தில், இதேபோன்ற பகுதி சந்திர கிரகணம் வரும் ஜூன் மாதம் 4ம் தேதி நிகழவுள்ளது. அதை இந்தியாவில் பார்க்க முடியாது, என்றார்.