திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சித்திலிங்கமடம் வியாக்ரபாதீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. இக்கோவிலில் கடந்த 25ம் தேதி சித்திரை பெருவிழா துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலாவும், 1ம் தேதி திருக்கல்யாணமும் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இன்று காலை நடராஜர் உற்சவமும், இரவு 8 மணிக்கு அவரோகணமும் நடக்கிறது. நாளை சண்டிகேஸ்வரர் உற்சவம், 6ம் தேதி விடையாத்தியுடன் சித்திரை பெருவிழா நிறைவடைகிறது.