காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், கச்சபேஸ்வர் தாயார் குளத்தில் எழுந்தருளும் மாசி மாதம் தெப்போற்சவம் துவங்கியது. நடப்பாண்டு, மூன்று நாள் உற்சவம் நேற்று துவங்கியது. இவ்விழாவை முன்னிட்டு, நேற்று, மாலை, 6:00 மணிக்கு, கச்சபேஸ்வரர், சுந்தராம்பியையுடன் கோவிலில் இருந்து புறப்பட்டார். தாயார் குளத்தை, இரவு, 7:30 மணிக்கு சென்றடைந்தார். பின், குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.