பதிவு செய்த நாள்
16
மார்
2020
10:03
ஆத்தூர்: அறுபடை பாலசுப்ரமணியர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. ஆத்தூர், புது பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள விநாயகர் கோவில் வளாகத்தில், அறுபடை பாலசுப்ரமணியர் கோவில் உள்ளது. அக்கோவில் புதிதாக புனரமைக்கப்பட்டு கடந்த ஜன., 30ல் கும்பாபிஷேக விழா நடந்தது. அதைத்தொடர்ந்து, மண்டல பூஜை தொடங்கியது. நேற்று, 48ம் நாளில், மண்டல அபிஷேக நிறைவு விழா நடந்தது. காலை, 7:00 முதல் மாலை, 4:00 மணி வரை, 108 சங்கு அபிஷேகம், பல்வேறு வகை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அப்போது, மூலவர் அறுபடை பாலசுப்ரமணியர், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு, சுவாமி திருவீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். மேலும், அன்னதானம் வழங்கப்பட்டது.