பதிவு செய்த நாள்
16
மார்
2020
10:03
மேட்டூர்: மாதேஸ்வரன் மலைக்கு செல்லும் பஸ்களில், பக்தர் கூட்டம் குறைந்துள்ளது. மேட்டூரிலிருந்து மாதேஸ்வரன் மலை, அதன் வழியாக கொள்ளேகால், மைசூருக்கு, தமிழக அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் - 13 இயக்கப்படுகின்றன. குறிப்பாக, சேலம், தர்மபுரி, ஈரோடு, அதன் சுற்றுப்பகுதி மாவட்டங்களிலிருந்து, அந்த பஸ்களில், ஏராளமான பக்தர்கள் செல்வர். ஆனால், கொரோனா வைரஸால், மேட்டூர் வழியாக, மாதேஸ்வரன் மலைக்கு செல்லும் பஸ்களில், பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. வரும் வாரம், யுகாதி பண்டிகைக்கும், பக்தர்கள் எண்ணிக்கை குறையும்.