பதிவு செய்த நாள்
16
மார்
2020
12:03
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலுக்கு வருபவர்களுக்கு, நேற்று முதல், கொரோனா வைரஸ் சோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவிலுக்கு, அதிகளவில் சுற்றுலா பயணியர் வரும் நிலையில், எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, நேற்று, சுகாதார துறை சார்பில், கோவிலின் பிராதன நுழைவு வாயிலில், கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாம் அமைக்கப்பட்டு, ஒரு டாக்டர் தலைமையில், இரண்டு உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள், கோவிலுக்கு வரும் பக்தர்களை சோதனை செய்த பின், அனுமதிக்கின்றனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் வழங்கப்படுகிறது.