பதிவு செய்த நாள்
17
மார்
2020
10:03
வீரபாண்டி: சேலம், அரியானூர் மகாசக்தி மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனியில் பொங்கல் பண்டிகை நடத்தப்படுகிறது. நடப்பாண்டு விழா வரும், 19ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. 22ல் ஊர் மக்கள் சார்பில் சத்தாபரண ஊர்வலம், 31ல் திருவிளக்கு பூஜை, ஏப்., 1ல் சக்தி அழைத்தல், 2ல் பொங்கல் வைத்தல், மாவிளக்கு, அக்னி கரகம், பூங்கரகம், வண்டி வேடிக்கை ஆகியவை நடக்கவுள்ளது. அன்று முழுவதும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அறுசுவை உணவுடன், சமபந்தி விருந்து வழங்கப்படும். ஏப்., 3ல் மஞ்சள் நீராட்டு உற்சவத்துடன், விழா நிறைவு பெறும்.