ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு மத்திய பிரதேச மாநில பக்தர்கள் எவர்சில்வரில் 15 அடி உயர திரிசூலத்தை காணிக்கையாக வழங்கினர். ராமேஸ்வரம் கோயிலில் தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் புனித நீராடி தரிசனம் செய்கின்றனர். இக்கோயில் வட மாநில பக்தர்கள் பலருக்கும் குல தெய்வமாக உள்ளதால், தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்களை காணிக்கையாக வழங்குவர். இரு தினங்களுக்கு முன் ம.பி.,யை சேர்ந்த சிவன் வழிபாட்டு குழு பக்தர்கள், 140 கிலோவில் 15 அடி உயர எவர்சில்வர் திரிசூலத்தை காணிக்கையாக வழங்கினர். இதனை கோயில் நுழைவு வாசலில் நிறுவ வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.