பாலமேடு : பாலமேடு பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா கொரோனா வைரஸ் எதிரொலியாக தள்ளிவைக்கப்பட்டது. இக்கோயில் விழா மார்ச் 22ல் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கி 29ல் கொடியேற்றம் நடக்கவிருந்தது. ஏப்., 5, 6, 7 தேதிகளில் விழா நடக்கவிருந்தது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கையாக விழாவை தற்காலிகமாக தள்ளிவைப்பதாகவும், விழா தேதி பின் அறிவிக்கப்படும் எனவும் பாலமேடு இந்து நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.