காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடியில் கொரோனா எதிரொலியாக பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாக காணப்பட்டது. குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலுக்கு பக்தர்கள் நாள்தோறும் அதிகம் வந்து செல்வர். தமிழகத்தின் முக்கிய இடமான இங்கு பக்தர்கள் உட்பட சுற்றுலா பயணிகளும் தினமும் வந்து செல்வர். மேலும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை பிள்ளைகளை கொடுத்து வாங்கும் பரிகாரம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். தற்போது, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முக்கிய கோயில்கள், திருவிழாக்கள், திரையரங்குகள், உட்பட மக்கள் கூடும் அனைத்து இடங்களும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குன்றக்குடியில், நேற்று பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட சற்று குறைவாகவே காணப்பட்டது. நேற்று வெள்ளிக் கிழமை நேர்த்தி செலுத்தும் பக்தர்கள் மட்டுமே வந்திருந்தனர்.