உத்தரகோசமங்கை : கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மார்ச் 20 முதல் கோயில்களில் பக்தர்களின் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அனைத்து சன்னதிகளிலும் ஆகம விதிகளின் படி அபிஷேக, ஆராதனைகள், பூஜை முறைகள் வழக்கம் போல் நடக்கிறது. உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் மரகத, ஸ்படிக லிங்க உச்சிகால பூஜை உள்ளிட்ட ஆறு கால பூஜைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கோயிலில் உள்ள பெரிய கதவுகள் அடைக்கப்பட்டு ஒரு ஆள் செல்லும் வகையில் உள்ள நுழைவு வாயிலில் மட்டுமே பூஜகர்கள் சென்று சுவாமிக்கு பூஜைகளை செய்து வருகின்றனர்.
* திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில், கொரோனா குறித்த பக்தர்களின் கவனத்திற்கான பதாகைகள் மூலம் விபரம் வைக்கப்பட்டுள்ளது. கோயில் ஸ்தானிக பட்டாச்சாரியார்களால் நித்ய பூஜை நடக்கிறது. ஏப்.7ல் நடக்கும் பங்குனி பிரம்மோத்ஸவத்திற்கான தேரோட்டம் உள்ளிட்ட மண்டகப்படி, வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக சமஸ்தான நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.